தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் ஆராயப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் இணைந்து இன்று (14) ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைவாக, இடம்பெற்ற இந்நிகழ்வில், விளையாட்டு மற்றும் கலாச்சார அம்சங்கள் பலவும் உள்ளடக்கியிருந்தன.
புத்தாண்டு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வருகைத் தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில போட்டிகளைக் கண்டுகளித்த பின்னர், அங்கு இடம்பெற்ற சைக்கிளோட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களும் பரிசுகளை வழங்கினார்.
சித்திரைப் புத்தாண்டு நிகழ்வை கண்டுகளிக்க வந்த பிரதேச மக்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதோடு, அப்போது மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தீர்வைத் தருவதாக உறுதி அளித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
“அவர்களிடம் நாம் சம்பளம் தொடர்பில் பேசியுள்ளோம். அவர்கள் கூறினார்கள். சம்பளமும் வழங்கப்படுகிறது. கோட்டா முறை ஒன்றும் பெற்றுக் கொள்ள வேண்டும் என. சம்பளம் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தொழிற்சங்கங்கள் என்ன செய்ய போகிறார்கள் என கேட்க உள்ளேன். இப்போதைக்கு இதை பெற்றுக் கொள்வதே சிறந்தது. இதற்கு பின்னர் காணி. 1-2 ஏக்கர்களை உங்களுக்கு வழங்கதானே இருக்கிறது. நீங்கள் தொழிற்சங்கங்கள் ஊடாக 1500 ரூபாய் கேட்டீர்கள். அதில் 1000 ரூபாய் வழங்க அவர்கள் தயாராக உள்ளனர். மீதி இன்சென்டீவில் எடுக்க முடியும். அதைதான் என்னிடம் கூறினார்கள். நான் கேட்கிறேன் என்ன நடந்தது என்று.
Be First to Comment