முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சந்தேகத்திற்குரிய E8 வீசா முறையை பயன்படுத்தி சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (25) காலை “அத தெரண பிக் ஃபோகஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கோசல விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.
ஆட்கடத்தல் என்று கூட சொல்லக்கூடிய அமைப்பில் முன்னாள் அமைச்சர் ஈடுபடுவது சந்தேகத்திற்குரியது என்றும் அவர் கூறினார்.
“ஆட்கடத்தல் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு முறைமைக்கு அமைச்சர் ஒருவர் ஏன் தள்ளப்பட்டார் என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு பெரிய சந்தேகம் எழுந்துள்ளது, அமைச்சர் சட்டவிரோததமாக இலாபம் சம்பாதித்ததாக சந்தேகிக்க முடியும். தற்போது எங்களிடம் ஆதாரம் இல்லை. தகவல்களை சேகரித்து வருகிறோம். குழுக்கள் உள்ளன. சட்டப்பூர்வமாக எடுக்கக்கூடிய சட்ட முறைகளும் உள்ளன. நீங்கள் ஒரு தரப்பினர் மட்டுமே. இங்கு பிரச்சினை E8 மட்டுமல்ல. நிறைய பிரச்சினைகள் உள்ளன.”
அத்துடன், இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த அவர், பிரச்சினைக்குரிய E8 வீசா முறையானது, முன்னாள் அமைச்சர் ஒருவரின் தலையீட்டில், வேலைவாய்ப்பு ஒப்பந்தம் இன்றி சட்டவிரோதமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறுகிய கால பருவகால வேலைவாய்ப்பிற்காக E8 வீசா முறையின் கீழ் தென்கொரியாவிற்கு செல்வதற்கான வீசாக்களை சட்டபூர்வமாக வழங்க முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Be First to Comment