மதுபான நிறுவனங்களிடமிருந்து சுமார் 7 பில்லியன் ரூபாய் வரிகள் அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும், அந்த வரிகளை அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
உரிய நடைமுறைக்கு புறம்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என நேற்று (9) அவரது அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Be First to Comment