புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.
அதன்படி, ரவி கருணாநாயக்க கடந்த தினம் தேசிய பட்டியல் ஆசனத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மீதமிருந்த தேசிய பட்டியல் ஆசனத்திற்கு பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Be First to Comment