தான் கலாநிதி பட்டம் பெற்றதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக இன்று (13) ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது..
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே. சி அலவத்துவல, அஜித் பி பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா, சதுர கலப்பத்தி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
Be First to Comment