அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் உட்பட 15 பேர் கொண்ட குழு நேற்று (02) இரவு அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை வரவேற்க பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஒன்று வந்திருந்ததாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய துணை அமைச்சரின் வருகையில், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து, இந்த குழு இந்தியாவுக்குப் புறப்பட உள்ளது.
Be First to Comment