களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தில் நிறுவப்பட்ட செயற்கை கருத்தரித்தல் நடைமுறைகளை நடத்தும் புதிய மகப்பேறியல் மற்றும் பெண்யோயியல் பிரிவில் IVF என்னும் in vitro fertilization (IVF) செயற்கை கருத்தரிப்பு முறையில் முதலாவது கருத்தரிப்பு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
குறைந்த செலவில் சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய, அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் முதலாவது கருத்தரித்தல் சிகிச்சை மையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment