Press "Enter" to skip to content

கொழும்பு மாநகர சபையின் முதலாவது கூட்டம் ஆரம்பம்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெறுகிறது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை உள்ளூராட்சி ஆணையாளர் சமீபத்தில் வெளியிட்டார், அதன்படி, கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் புதிய மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு இடம்பெறவுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை.

தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 5 உறுப்பினர்களும் தெரிவாகினர்.

மேலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 03 சார்பில் 3 உறுப்பினர்களும், சர்வஜன அதிகாரம் சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய சமாதான கூட்டணி சார்பில் 2 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 சார்பில் தலா 2 உறுப்பினகளுமாக 04 உறுப்பினர்களும் தெரிவாகினர்.

இதுதவிர, ஐக்கிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசிய விடுதலை முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, சுயேட்சைக் குழு எண் 01 மற்றும் சுயேட்சைக் குழு எண் 02 சார்பில் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் கொழும்பு மாநாகர சபைக்கு தெரிவாகினர்.

எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

தேர்தல் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் 50 சதவீதத்திற்கு மேல் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், கொழும்பு மாநகர சபையின் மேயர்களை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறும் கூட்டத்தில் நடத்தப்படவுள்ளது.

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *