Press "Enter" to skip to content

விளையாட்டைத் தேர்ந்தெடுப்பதன் அவசியம் குறித்து பிரதமர் வௌியிட்ட தகவல்

நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது ஒற்றுமை உட்பட விளையாட்டின் நற்பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வதற்கே ஒழிய வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு அல்ல என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

சுகததாஸ விளையாட்டு அரங்கில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்ற பாடசாலை நீச்சல் விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 50வது பாடசாலை வருடாந்திர நீச்சல் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் பல்வேறு பிரிவுகளின் நீச்சல் மற்றும் நீர் மூழ்கும் போட்டிகளில் வெற்றி சின்னங்களை வழங்கினார். ஒட்டுமொத்த ஆண்கள் நீச்சல் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து 20 வருடங்களாக மரதான புனித ஜோசப் கல்லூரியும், ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு மகளிர் கல்லூரியும், ஒட்டுமொத்த கலப்பு பாடசாலைச் சாம்பியன்ஷிப்பை வத்தல லைசியம் சர்வதேச பாடசாலையும் வென்றன. அதேபோல் நீர் மூழ்கும் பிரிவில் ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு பேராயர் கல்லூரி அணியும், ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு ராயல் கல்லூரியும் வென்றன.

இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“நாம் விளையாட்டில் வெற்றியோடு தோல்வியையும் சமமாக அனுபவித்து தாங்கிக்கொள்ள வேண்டும். இதை நாம் முதலில் நமது பிள்ளைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும், விளையாட்டின் மூலம் தலைமைத்துவம், அணி உணர்வு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற மிகவும் முக்கியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

இன்றைய இந்த திறமைகளைக் என்னை வியக்கவைத்தன. உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாட்டின் குழந்தைகளின் திறமைகள் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கிறன.

வரலாற்றில் எப்போதும் இலங்கையின் நாமத்தை சர்வதேச அளவில் ஓங்கச் செய்ய நமது விளையாட்டு வீரர்களால் முடிந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் நான் அதனையும் நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன்.

இன்று என் முன்னால் இருக்கும் உங்களுக்கும் அவ்வாறு நமது நாட்டின் பெயரை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல தேவையான சக்தியும் தைரியமும் கிடைக்கட வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலை நீர் விளையாட்டுச் சங்க உறுப்பினர்கள், அதிபர்கள் மற்றும் நெஸ்லே லங்கா தனியார் நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *