Press "Enter" to skip to content

திசைகாட்டி அரசு மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருகிறது

பலவீனமான, வினைதிறனற்ற, பொய் சொல்லும், ஏமாற்றும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருகிறது. நேற்று திடீரென எரிபொருள்களில் விலை அதிகரிப்பைச் செய்தது.

எரிபொருள் விலையை அதிகரித்த தற்போதைய அரசாங்கம், கடந்த தேர்தல் காலங்களில் ஏலவே காணப்படும் எரிபொருள் விலைச்சூத்திரத்தை மாற்றுவோம் என கூறியது. போதாக்குறைக்கு துறைமுகத்தில் இறக்கப்படும் எரிபொருளை அதே விலையில் நுகர்வோருக்கு பெற்றுத் தருவோம் என உரக்கத் தெரிவித்தது. துறைமுகத்தில் ஒரு விலைக்கு இறக்கப்படுகிறது.

பின்னர் பொதுமக்களுக்கு மற்றொரு விலையில் விற்கப்படுகிறது. ஊழல், மோசடி, திருட்டு மற்றும் இலஞ்சம் போன்றனவையே இதற்குக் காரணம். இவை அனைத்தையும் நிறுத்துவோம், எரிபொருள் மீதான வரிகளை நீக்குவோம். துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையில் எரிபொருளை மக்களுக்கு பெற்றுத் தருவோம் என தற்போதைய ஆளும் தரப்பினர் வாக்குறுதியளித்திருந்தனர்.

ஆனால், தெளிவான அதிகாரத்தோடு ஆட்சிக்கு வந்த தற்போதைய ஆளும் தரப்பினரால் இன்றளவில் இதில் எதுவும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (01) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் கொமிஸ் எடுத்தல் நிறுத்தப்பட்டுள்ளனவா ? எரிபொருள்கள் மீதான வரிச்சுமைகள் நீக்கப்பட்டுள்ளனவா ? என்பன குறித்து நாம் இந்த அரசாங்கத்திடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையில் நுகர்வோருக்கு தற்போது எரிபொருள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும் நாம் இந்த அரசாங்கத்திடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. IMF இன் 4 ஆவது தவணையைப் பெறுவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவே இந்த அரசாங்கம் இவ்வாறு செயல்பட்டு வருகிறது.

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றி அதை மேலும் மக்களுக்கு சாதகமான ஒன்றாக மாற்றியமைப்போம் என்று பிரஸ்தாபித்தவர்கள் இன்றும் கூட முந்தைய அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரத்தையே பின்பற்றுகிறார்கள்.

எரிபொருள் விலையேற்றம் செய்யப்பட்டதன் அடிப்படையை நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் இன்று மக்களை ஏமாற்று, பொய் சொல்லி, தவறாக வழிநடத்தி வருகிறது. சிரேஷ்ட பிரஜைகளினது சேமிப்புகளுக்கு விசேட திட்டமொன்றை முன்னெடுப்போம் என பிரஸ்தாபித்தனர். ஆனால் நடந்தது ஒன்றுமில்லை. சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் 15 வீதமாக அமையும் விதத்தில் சரிசெய்து தரப்படும் என தெரிவித்தனர்.

முன்னர் 15 இலட்சம் மற்றும் 10 இலட்சம் வைப்புத்தொகைகளுக்கு 15% வட்டி வழங்கப்பட்டன. இதனை தற்போது இல்லாது செய்துள்ளனர். புதிய சேமிப்புக் கணக்குகள், சிரேஷ்ட பிரஜைகளுக்கு கூடிய சலுகைகளை வழங்குவதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டன.

சிரேஷ்ட பிரஜைகளினது நிலையான வைப்புக்களுக்குப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்த 15 % வட்டியை எப்போது வழங்குவீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன, உயிர்களைக் காக்கத் தேவையான உபகரணங்கள் போதுமானதாக இல்லை என்று இதற்கு முன்னர் பல தடவை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியது.

சில உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காணப்படும் எம். ஆர். ஐ. ஸ்கேனிங் இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த பரிசோதனை நடவடிக்கையை வெளியில் செய்ய வேண்டி வந்திருக்கிறது.

மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது குறித்து எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமான பதில்கள் தெரிவிக்கப்பட்டு, ஆளும் தரப்பினர் எம்மீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.

பொய் சொல்லும் ஏமாற்றும் இந்த அரசாங்கத்தின் இலவச சுகாதாரக் கொள்கை இவ்வாறே அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

நாட்டில் கொலைச் சம்பங்களும் அவ்வாறு காணப்படுகின்றன. கொலை கலாச்சாரம் தொடர்ந்து வருகிறது. அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், குண்டர்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களால் துப்பாக்கிச் சூடுகளும் கொலைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் நாடு முழுவதும் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான எந்த வேலைத்திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லையா என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்தால் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது போயுள்ளன. ஆகவே தேசியப் பாதுகாப்புக்கு இது பிரச்சினையாக அமைந்து காணப்படவில்லை என அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விடயத்தில் அரசாங்கத்திற்கு பொறுப்பு காணப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

வாக்குறுதிகளை மீறி இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது. தற்போது இந்த அரசாங்கத்திற்கு ஏமாற்றே மிஞ்சிப்போயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *