Press "Enter" to skip to content

காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன் தற்கொலை

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் 22 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *