Press "Enter" to skip to content

இலங்கையின் குரல்

மூன்று மாகாணங்களுக்கு மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்…

பொருளாதாரத்தை மீட்டெடுக்க, புதிய மறுசீரமைப்புகளும் மாற்றங்களும் அவசியம்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதார…

வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகையை வென்ற அதிஷ்டசாலி

இலங்கையின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை நேற்று (16) வெற்றி பெறப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் அதிஷ்ட இலாபச்சீட்டின் 2210 ஆவது குலுக்கலில் சூப்பர் பரிசாக வழங்கப்பட்ட 474,599,422…

கடலோர ரயில் சேவை பாதிப்பு

கடலோர ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ நிலைமை காரணமாக, லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம், தற்போதைய இராணுவ நிலைமை குறித்து விழிப்புடன்…

கொழும்பு மாநகர சபையின் முதலாவது கூட்டம் ஆரம்பம்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெறுகிறது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை…

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயம்

இன்று (16) காலை பினைக் பிராக் (Bnei Brak) பகுதியில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு – சர்வஜன அதிகாரத்தின் ஆதரவு எதிர்ககட்சிக்கு

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க சர்வஜன அதிகாரம் முடிவு செய்துள்ளது. கட்சியின் செயற்குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தனது…

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களை அவர்கள் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளனர். ஈரான் இதற்கு நிச்சயமாக பதிலடி…

விமான விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் பாரிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்திலும் பெரும் சோகத்தை…