Press "Enter" to skip to content

John Keells Properties நிறுவனத்தின் சமீபத்திய குடிமனைத் திட்டமான Viman திட்டத்தின் மாதிரி அடுக்குமாடி வீடுகள் தற்பொழுது பார்வையிடுவதற்குத் தயார்

John Keells Properties நிறுவனம் தனது சமீபத்திய குடிமனைத் திட்டமான ஜாஎல – Viman திட்டத்தின் மாதிரி வீடுகளை 2024 ஜனவரி 24ஆம் திகதி 186, வொக்ஷால் வீதி, கொழும்பு 02 என்ற முகவரியில் உள்ள John Keells Properties அலுவலகத்தில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியது. ‘புதிய உலகத்தை உருவாக்குதல்’ மற்றும் வாழ்க்கை அனுபவத்தை மீள வரையறுப்பதற்கான தெரிவுகளை வழங்குதல் என்ற உருவாக்குனர்களின் நோக்கத்திற்கு இணங்கும் வகையில் ஜா – எலவின் இதயப் பகுதியில் வாழக்கூடிய இடமாக மாற்ற Viman எவ்வாறு தயாராக உள்ளது என்பதை விரிவாகப் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன், இதன் விபரங்கள் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன. கனவு நிறைந்த வாழ்விடங்களை உருவாக்குதல் மற்றும் இணையற்ற அனுபவத்தை வழங்குவதில் புத்தாக்கமான அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ரியல்எஸ்டேட் துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவதில் John Keells Properties நிறுவனம் நற்பெயரைப் பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும், John Keells Group இன் பிரதித் தலைவருமான நதீம் ஷம்ஸ் தெரிவிக்கையில், “சாதாரண குடிமனைத் தொகுதியாக மாத்திரம் அல்லாத Viman குடிமனைத் திட்டத்தின் மாதிரி வீடுகளைக் காட்சிப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். சமநிலை, இயற்கை மற்றும் நவீன சௌகரியம் போன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுற்றுச்சூழல் பற்றிய உணர்வு, பல்வேறு இடங்களுக்கான அணுகல் மற்றும் சமூக உணர்வை வளர்ப்பது போன்ற சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட குடியிருப்புத் தொகுதிகளை Viman கொண்டுள்ளது. Viman இல் வீட்டைச் சொத்தமாக்கிக் கொள்ள விரும்பும் எதிர்கால உரிமையாளர்கள் கொழும்பில் அதன் மாதிரி வீடுகளைப் பார்வையிட முடியும் என்பதுடன், அவர்களுக்குக் காணப்படும் கேள்விகளுக்கான பதில்களை எமது துறைசார் குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

6 ஏக்கர் நிலப்பரப்பு விஸ்தீரணத்தில், சௌகரியமான நவீன 418 தொடர்மாடி வீடுகளைக் கொண்டிருக்கும் Viman குடியிருப்புத் திட்டமானது, சிறிய நகரின் கட்டமைப்பின் அழகைத் தக்கவைக்கும் அதேநேரம், கொழும்பு நகரை இலகுவில் அணுகக் கூடியதாகவும், பாதுகாப்பு, குடும்பங்களுக்கு நட்பான சூழலை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜா-எல நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்புக்கள், சுப்பர்மார்க்கட்டுக்கள், வங்கிகள், உணவகங்கள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இலகுவான அணுகலைக் கொண்டுள்ளன. மேலும், Viman குடியிருப்புத் திட்டமானது கொழும்புத் துறைமுக நெடுஞ்சாலைக்கு அருகாமையில் அமைந்திருப்பதுடன், ஜா-எல மற்றும் கொழும்புக்கு இடையே விதிவிலக்கான இணைப்பை எளிதாக்குகிறது. இது அமைந்துள்ள மூலோபாய இருப்பிடம் வசதியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு திறமையான பயணத்தையும் உறுதி செய்கிறது.

பசுமை மிக்க மத்திய தோட்டப்பகுதியில் பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன. நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக் கூடம், வெளிப்புற ஒன்றுகூடல் இடம், தியான கூடம், கிளப்ஹவுஸ், சிறுவர்கள் விளையாட்டு இடம், சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபாதைக்கான இடம், பல்வேறு தேவைகளுக்கான உள்ளரங்கம், மின்னியல் வாகனங்களுக்கான மின்னேற்ற வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை Viman கொண்டுள்ளது. இந்த விசேட அம்சங்கள் குடியிருப்பாளர்கள் தமக்கிடையிலான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும், குடும்பமாக வாழ்வதற்கான சிறந்த சூழலையும் உருவாக்குகின்றது.
குறிப்பாக, Viman குடியிருப்புத் திட்டமானது வலுசக்தி நிறைந்த சூரிய சக்தியால் இயங்கும் வீடுகள் மற்றும் ஏராளமான பசுமையான இடங்கள் மற்றும் வலுவான சமூக உணர்வை வளர்ப்பது போன்ற அம்சங்களைக் கொண்டிருப்பதால், நவீன வசதிகள் மற்றும் நிலைபேறான வாழ்க்கை முறை என்பவற்றுக்கு John Keells Properties முன்னுரிமை அளித்துள்ளது என்பதற்கு உதாரணமாக அமைகின்றன.

இலங்கையின் நகர்புறக் குடியிருப்பின் கட்டடச் சூழலை சீர் செய்வதில் John Keells Properties தொடர்ந்தும் முன்னிலை வகிப்பதுடன், The Emperor, The Monarch, 7th Sense, OnThree20, TRI-ZEN மற்றும் Cinnamon Life Integrated Resort போன்றவை இதற்கு சாட்சியமாக அமைகின்றன.

வருங்காலத்தில் கொள்வனவு செய்யவிருப்போர் கொழும்பிலுள்ள மாதிரி தொடர்மாடிக் குடியிருப்பைப் பார்வையிடுவதற்கும் வருவதற்கு +94 706 062 062 என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளவும்

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *