Press "Enter" to skip to content

‘நாம் அங்கீகாரத்தில் உச்சம் தொட்டு விட்டோம்’ எனும் தொனிப்பொருளை அறிமுகப்படுத்தி சுகாதாரத் துறையில் புரட்சிக்கு வித்திட்டுள்ள IIHS நிறுவனம்

தாதியர் சேவை உள்ளிட்ட சுகாதாரத் துறை தொழில்களுக்கு பிரவேசிப்பதற்கு எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கான கற்கை பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்தியுள்ள International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் தெற்காசிய சுகாதாரக் கற்கை நிறுவனங்கள் மத்தியில் முதன்மையான நிறுவனமாக தடம் பதித்துள்ளது. ஆரம்பத்திலிருந்து IIHS நிறுவனம் உருவாக்கியுள்ள உலகத் தரம் வாய்ந்த சுகாதார வல்லுநர்கள் இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியாகவும் போற்றுதலுக்குரிய சேவைகளை வழங்கும் தொழில் வல்லுநர்களாக உள்ளனர். ஆற்றல் மிக்க தொழில் வல்லுநர்களை உருவாக்குவதன் ஊடாக உள்நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் அங்கீகாரம் பெற்றுள்ள IIHS நிறுவனம் அண்மையில் தமது புதிய தொனிப்பொருளான “நாம் அங்கீகாரத்தினால் உச்சம் தொட்டு விட்டோம்” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அங்கீகாரம் பெற்ற சுகாதார வல்லுநர்களை உருவாக்குவதை வெறும் இலக்காக மாத்திரம் கொள்ளாமல் அதனை யதார்த்தமாக கருதுவதே இந் நிறுவனத்தின் தனித்துவமான பண்பு ஆகும். இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் சுகாதாரக் கட்டமைப்புக்குள் பிரவேசிப்பதற்கு எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு உயர் தரத்திலான பாடநெறிகளை அளிப்பதற்கு IIHS நிறுவனம் தொடர்ந்தும் உழைத்து வருகின்றது. மேற்படி நிறுவனத்தின் பாடவிதானங்களும் கற்பித்தல் முறைகளும் பெறுபேறுகளை இலக்காக கொண்ட தரமான கல்விக்கான சர்வதேச தர நியமங்களுக்கு உட்பட்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நியாயமான கட்டணங்களில் தமது கற்கை பாடநெறிகளை வழங்குவதற்கு IIHS நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. உலக அங்கீகாரத்துடன் முன்னணி பங்குதாரர் தரப்புகளுடன் எட்டப்பட்டுள்ள கூட்டிணைவு IIHS நிறுவனத்தை உண்மையிலேயே “அங்கீகாரத்தினால் உச்சம் தொட்ட” கல்வி நிறுவனமாக இதர கற்கை நிறுவனங்கள் மத்தியில் சிம்மாசனமிட்டு அமர வைத்துள்ளது.

Deakin University, James Cook University, Edith Cowan University (அவுஸ்திரேலியா), Coventry University, University of Aberdeen (ஐக்கிய இராச்சியம்), Metropolia University (பின்லாந்து), SUNY Canton University (ஐக்கிய அமெரிக்கா) போன்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களுடன் கூட்டிணைவை ஏற்படுத்தி ஆகச் சிறந்த கற்கை நெறிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு IIHS நிறுவனத்தினால் முடிந்துள்ளது. மேற்படி கூட்டிணைவின் மூலம் IIHS நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு நவீன உலகுக்கு ஏற்ற கல்வித் தகைமைகளை பூர்த்தி செய்வதோடு உலக அங்கீகாரம் பெற்ற நிபுணர்களாகவும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த IIHS நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கித்சிறி எதிரிசிங்க “பல்வேறு வகையிலான கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாணவர்களுக்கு உதவும் IIHS நிறுவனம் தொழில், இளங் கலை மற்றும் பட்டப்பின்படிப்பு மட்டத்திலான கற்கை பாடநெறிகளை வழங்குமொரு கல்வி நிறுவனமாகும். தாதியர் மற்றும் சுகாதாரக் கல்வி, உயிர் மருத்துவ விஞ்ஞானம், கல்வி, சுகாதார வர்த்தக முகாமைத்துவம் மற்றும் இணை சுகாதார சேவை போன்ற பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய பாடநெறிகளை இங்கு கற்க முடியும். இந்த பாடநெறிகள் ஊடாக உலக அளவில் தமது தொழில் வல்லமையை உயர்த்திக் கொள்வதற்கு தேவையான அறிவு, ஆற்றல் மற்றும் திறன்களை கொண்ட வலுவான மாணாக்களை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். “அங்கீகாரத்தில் உச்சம் தொட்டு விட்டோம்” எனும் தொனிப்பொருளுக்கமைய வெறும் தொழில் வல்லுநர்களாக இல்லமல் சுகாதாரத் துறையின் சிக்கலான நிலைமைகளை எதிர்கொள்ளக்கூடிய தலைவர்களை உருவாக்குவதற்கு நாம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்போம்” என்றார். கோட்பாட்டு ரீதியான அறிவுடன் நின்றுவிடாது நிகழ்கால சுகாதார துறையின் போக்குகளுக்கு பொருந்தும் வகையிலான நடைமுறைச்சாத்திய திறன்களை கொண்ட தொழில் வல்லுநர்களை உருவாக்குவதை IIHS நிறுவனம் முதன்மையான பணியாக கருதுகிறது. சுகாதாரத் துறையில் முன்னோக்கிச் செல்வதோடு மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தயுள்ள IIHS நிறுவனம் எல்லைகளை கடந்து செல்வதற்கு தம்மோடு இணையுமாறு சுகாதாரத் துறை தொழில்களுக்கு பிரவேசிப்பதற்கு எதிர்பார்க்கும் சகலருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *