Press "Enter" to skip to content

DSI Tyres நிறுவனம் ஏற்பாடு செய்த Hankook டயர் விற்பனை முகவர் சந்திப்பு RIU ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவு செய்தது

இலங்கை டயர் சந்தையின் நம்பிக்கை மிக்க வர்த்தகநாமமான DSI Tyres நிறுவனம் இலங்கை சந்தைக்கு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ள Hankook ரேடியல் டயர்களை உள்நாட்டுச் சந்தையில் மேலும் உறுதியாக நிலைநிறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. உலகப் புகழ் பெற்ற Hankook டயர் விற்பனை முகவர்களையும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களையும் கௌரவிக்கும் வைபவமொன்றை DSI Tyres நிறுவனம் அவுங்கல்ல RIU ஹோட்டலில் வெகு விமரிசையாக நடாத்தியுள்ளது. இதன் போது DSI Tyres நிறுவனத்துடன் இணைந்து Hankook டயர்களை உள்நாட்டுச் சந்தையில் விநியோகிப்பதற்கு முதன்மை பங்களிப்கை வழங்கிய விற்பனை முகவர்களை கௌரவிக்கும் முகமாக Hankook நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் DSI Tyres நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆகியோர் கையொப்பமிட்ட விஷேட சான்றிதழ்களும் அதிகாரம் பெற்ற விற்பனை முனவர்களுக்கு வழங்கப்பட்டது. உத்தரவாதத்துடனும் நம்பிக்கையுடனும் Hankook டயர்களை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலான அறிவுறுத்தல்களும் விற்பனை முகவர்களுக்கு வழங்கப்பட்டது.

உள்நாட்டு டயர் சந்தையில் முதன்மையானதும் நம்பிக்கைமிக்கதுமான வர்த்தகநாமமான DSI Tyres நிறுவனத்தின் நிர்வாகத்தின் ஊடாக Hankook டயர்களை விநியோகித்தமை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் விற்பனையும் அதிகரிப்பதற்கு ஏதுவாக உள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த விற்பனை முகவர்கள் தெரிவித்தனர். பல தசாப்த கால பெருமித வரலாற்றைக் கொண்டுள்ள தென் கொரியாவின் Hankook டயர் நிறுவனமானது, உலகின் முன்னணி டயர் உற்பத்தியாளர்கள் மத்தியில் முதன்மையான இடத்தில் திகழும் நிறுவனமாகும். பாதுகாப்பு, நீண்ட கால உழைப்பு, சூழல் நேயமிக்க தரம், சௌகரியம் போன்ற அனைத்து பண்புகளையும் கொண்டதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள Hankook ரேடியல் டயர் வாகனத்துக்கு புதிய தோற்றத்தையும் பெறுமதியையும் அளிக்கிறது. இலங்கை வீதிக் கட்டமைப்பு, காலநிலை மற்றும் இலங்கையில் பரவலாக இயங்கும் வாகனங்களுக்கு Hankook டயர்கள் பெரிதும் பொருந்துவதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்திய பின்னர் அவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் நம்பிக்கையுடன் அவற்றை பாவிக்க முடியும்.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *