கொழும்பில் அமைந்துள்ள ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில், திறன்கள் அபிவிருத்தி மற்றும் பயிற்சிக்கான சர்வதேச கெம்பஸிற்கு (SDTI) 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த தேசிய தொழில்முனைவோர் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரம் SDTI கெம்பஸின் தொழில்முனைவோர் கல்வி, புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கான சிறப்பான அர்ப்பணிப்புக்களை எடுத்துக்காட்டுகிறது. SDTI கெம்பஸ் தெற்காசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதானது, அதன் சிறப்புமிக்க நற்பெயருக்கு மற்றுமொரு அங்கீகாரத்தைச் சேர்த்ததுள்ளது. இந்த நிறுவனம் ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது, இந்த தரச் சான்றிதழானது தரமான கல்வி மற்றும் செயல்பாட்டுச் சிறப்பிற்கான SDTI கெம்பஸின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்தி நிதியத்துடன் இணைந்து SDTI கெம்பஸ், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு பாடநெறிகளை வழங்குகிறது. இந்த மூலோபாய கூட்டு நடவடிக்கையானது இலங்கை முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் திறன் கொண்ட பல ஆசிய பிராந்திய இளைஞர்களுக்கு குறைந்த செலவில் கல்வி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2021 SAPSAA எக்ஸலன்ஸ் விருதுகள் வழங்களில், SDTI கெம்பஸ் சிறந்த தொழில்முறை மூலோபாய மற்றும் உயர் கல்வி நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை முழுவதிலும் உள்ள அதன் கிளைகளின் ஊடாக, SDTI பெம்பஸ் கோட்பாட்டு மற்றும் நடைமுறை ரீதியான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் உயர் தொழில்முறை தகுதிகளை வளர்க்க உதவுகிறது. அது மட்டுமின்றி, பிரதமர் விருதுகள் (2011), ஐக்கிய நாடுகளின் கல்வி தங்க விருது (2013-2014), தேசிய ரீதியான சிறப்பு விருது (2018) மற்றும் ஆசியா சிறப்பு விருதுகள் (2021) ஆகியவை அதன் கல்வி செயற்பாடுகளுக்கான அங்கீகாரங்களில் உள்ளடங்குகின்றன. இத்தகைய முன்முயற்சிகளின் ஊடாக, உயர்தரக் கல்வியினை குறைந்த செலவில் வழங்குவதை உறுதி செய்தல் என்ற அதன் நோக்கத்தின் அடிப்படையில், SDTI கெம்பஸ் இலங்கையில் கல்வி மற்றும் தொழிற்கல்வி அபிவிருத்திக்காக மாணவர்களை தயார்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
Be First to Comment