Press "Enter" to skip to content

DSI Tyres இலங்கையில் முதல் தடவையாக Online Pick Up From Dealer திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

டயர் உலகில் புரட்சிகள் செய்த முன்னோடி நிறுவனமான DSI Tyres நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் dsityreshops.com இணையதளத்தின் ஊடாக Online Pick Up From Dealer திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த Online Pick Up From Dealer திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலிருந்தவாறே துரிதமாக டயரை ஆடர் செய்து தமக்கு அருகிலுள்ள டயர் விற்பனை நிலையத்தில் அந்த டயரை இலகுவாக பொருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

dsityreshops.com இணையதளத்திற்கு பிரவேசித்து தமக்கு தேவையான டயரை Select செய்த பின்னர் இணைய வழி ஊடாகவே பணத்தை செலுத்தி குரியர் சேவை ஊடாக அதனை வீட்டுக்கே தருவித்துக்கொள்ளவோ Online Pick Up From Dealer திட்டத்தை தெரிவு செய்து அருகிலுள்ள டயர் விற்பனை நிலையத்தில் டயரை பெற்று பொருத்திக் கொள்ளவோ முடியும். கையில் பணம் இல்லை என்றாலும் Buy Now Pay Later வசதி ஊடாக தவணை முறையில் செலுத்துவதற்கு டயர்களை கொள்வனவு செய்வதற்கு முடிகின்றமை தனித்துவமானதொரு அம்சமாகும். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தொடங்கப்பட்ட Online Pick Up From Dealer திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ள அதீத வரவேற்பை அடுத்து விரைவிலேயே இத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு DSI Tyres எதிர்பார்த்துள்ளது. Online Pick Up From Dealer திட்டத்தை விற்பனை முகவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வைபவம் அண்மையில் ஹெரிடன்ஸ் கன்டலம ஹோட்டலில் வெகு விமிரிசையாக நடைபெற்றது. “இலங்கையர்கள் பெரிதும் நேசிக்கும் வர்த்தகநாமமாக தடம் பதித்துள்ள DSI Tyres தொடர்ந்தும் தமது உற்பத்திகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றது. தமக்கு தேவையான டயர் எதுவாக இருந்தாலும் அது தொடர்பான சகல விபரங்களையும் இணையதளத்தில் பெற்றுக்கொள்வதன் மூலம் நேரத்தை சேமிக்கவும் இப்பொழுது இலகு தவணை முறையில் டயர்களை கொள்வனவு செய்யவும் முடியும்.” என DSI Tyres முகாமைத்துவப் பணிப்பாளர் திரு காவிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *