CBL நிறுவனத்தின் உப நிறுவனமான Plenty Foods (Pvt) Limited நிறுவனத்தின் பிரதான தயாரிப்பான இந்நாட்டின் பிரபலமான தானிய உணவான சமபோஷவின் ஊட்டமளிப்பில் ‘2024 சமபோஷ பாடசாலை விளையாட்டுப் போட்டி’ ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இவ்வருட விளையாட்டுப் போட்டிகள் வடமத்தி, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய ஐந்து மாகாணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளன.
சமபோஷவின் அனுசரணையுடன் மாகாணக் கல்வி அலுவலகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டுப் போட்டி 5 மாகாணங்களிலும் தனித்தனியான விளையாட்டுப் போட்டிகளாக ஓகஸ்ட் மாதம் முதல் செப்டெம்பர் 13ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
இதில் இடம்பெறவுள்ள 70ற்கும் அதிகமான போட்டிகளில் 2000ற்கும் அதிகமான பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 18,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்கெடுக்கவுள்ளனர். வெற்றிபெறும் பாடசாலைகள் மற்றும் வீர வீராங்கனைகளுக்கு, பதக்கங்கள், கேடயங்கள், சான்றிதழ்களை வழங்க மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விளையாட்டுப் போட்டி தொடர்பில் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி மற்றும் விளையாட்டு) திரு.அதுல விஜயவர்தன குறிப்பிடுகையில், “பாடசாலை மாணவர்களின் திறமைகளை அதிகரித்து அவர்களின் உடல் மற்றும் உள வலிமையை மேம்படுத்துவதற்கும், அவர்களின் திறமைகளை தேசிய மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான பலத்தை வழங்குவதற்கு CBL சமபோஷ வழங்கும் உயர்ந்த ஒத்துழைப்பை நாம் மதிக்கின்றோம்” என்றார்.
இதன் முதலாவது விளையாட்டுப் போட்டியான ஊவா மாகாண விளையாட்டுப் போட்டி பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதானத்தில் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதுடன், ஊவா மாகாணத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி மற்றும் விளையாட்டு) திரு.எச்.ஜி.சன்ன கருணாசேன இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “அடிமட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு வருவதற்கு முயற்சிக்கும் மாணவர்களை உயர்ந்த இடத்திற்குக் கொண்டுசெல்ல எமக்கு அனுசரணை வழங்கி இந்த விளையாட்டுப் போட்டியை வெற்றியைநோக்கிக் கொண்டு செல்ல சமபோஷவே முதன் முதலில் முன்வந்தது” என்றார்.
இரண்டாவது கட்டமாக தென்மாகாண விளையாட்டுப் போட்டி ஓகஸ்ட் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மாத்தறை கோட்டவில விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி மற்றும் விளையாட்டு) திரு.ஆர்.எம்.க்ரிஷான் துமிந்த குறிப்பிடுகையில், “தென்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் இந்தத் தென்மாகாண விளையாட்டுப் போட்டிக்கு சமபோஷ வர்த்தக நாமத்தின் மூலம் மாணவர்களின் விளையாட்டு, கல்வி, போஷாக்கு என்பனவற்றை உயர்த்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் அனைவரின் சார்பிலும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.
மூன்றாவதாக, கிழக்கு மாகாணத்தின் விளையாட்டுப் போட்டி செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். இது பற்றி கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாணத்தின் உதவி விளையாட்டுப் பணிப்பாளர் திரு.ஏ.எச்.மொஹமட் அக்மல் குறிப்பிடுகையில், “பல வருடங்களின் பின்னர் பாடசாலை விளையாட்டை மேம்படுத்த கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்துள்ள முதலாவது அனுசரணையாளர் சமபோஷ ஆகும். இந்த விளையாட்டுப் போட்டி கிழக்கு மாகாணத்திற்குப் பாரியதொரு வரப்பிரசாதமாகும். தேசிய உற்பத்தியொன்று நாட்டிலுள்ள பிள்ளைகளுக்காக முன்னெடுக்கும் இந்தச் சேவை மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது” என்றார்.
வடமேல் மாகாணத்தின் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை குருநாகல் வெலகெதர மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த வடமேல் மாகாணத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (சுகாதாரம் மற்றும் உடற்கல்வி) திரு.வை.எம்.எச்.கே. அபேகோன் குறிப்பிடுகையில், “பாடசாலை விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களின் திறமை குறித்து மேலும் விளிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள, விளையாட்டு வீரர் என்ற ரீதியில் அபிமானத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், அந்த அபிமானத்தின் ஊடாக இந்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் சர்வதேச மட்ட வீர வீராங்கனைகளை உருவாக்கவும் சமபோஷ வழங்கிவரும் தேசிய ஒத்துழைப்பு பாராட்டப்பட வேண்டியது” என்றார்.
இறுதிப் போட்டியான வடமத்திய மாகாண விளையாட்டுப் போட்டி அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளது. இது பற்றி கருத்துத் தெரிவித்த வடமத்திய மாகாண விளையாட்டு, சுகாதார, பௌதீகக் கல்வி உதவிப் பணிப்பாளர் திரு.கே.கே.சி.டி போரோகம குறிப்பிடுகையில், “பல வருடங்களாக சமபோஷ வடமத்திய மாகாணத்தில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை உயர்த்துவதற்கும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், தேசிய மட்டத்தில் அடியெடுத்து வைப்பதற்கும் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. கஷ்டங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் உள்ள இந்த மாணவர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேறி வருவதற்கு சமபோஷ வழங்கும் இந்த ஒத்துழைப்பை நான் பாராட்டுகின்றேன்” என்றார்.
CBL உணவுப் பிரிவின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு.மஞ்சுள தகநாயக்க இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார், “நிறுவனம் எப்பொழுதும் இலங்கையிலுள்ள பிள்ளைகளின் விளையாட்டு, கல்விச் செயற்பாடுகளுக்காக அர்ப்பணிப்புடன் எதிர்காலத்திற்காக திறமைகளைக் கொண்ட சமுதாயத்தை ஊருவாக்குவதில் ஆர்வம் உள்ள நிறுவனமாகும். இதற்காக CBL நிறுவனத்தின் உணவுப் பிரிவு சமபோஷ வர்த்தக நாமத்தின் கீழ் பாரிய வேலைத்தி்டடங்களை முன்னெடுத்து வருவதுடன், இது அதில் மற்றுமொரு விரிவான நடவடிக்கையாகும். இந்த விரிவான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பிரதானமாக நடைமுறைப்படுத்தப்படும் மாகாணப் பாடசாலை விளையாட்டுப் போட்டிக்காக நாம் சிறந்த ஒத்துழைப்பை வழங்குகின்றோம். விளையாட்டின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கும் அனுபவத்தின் ஊடாக அவர்களின் ஒழுக்கம், குழுச் செயற்பாடு, பொறுமை, தலைமைத்துவம், ஆரோக்கியம் போன்ற அம்சங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என நாம் நம்புகின்றோம்” என்றார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த CBL உணவுப் பிரிவின் விற்பனை முகாமையாளர் திரு.வி.பி.கோவின்ன குறிப்பிடுகையில், “போசாக்கினால் மாத்திரமன்றி ஆத்ம கௌரவத்துடன் சகல துறைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய இளைஞர் சமுதாகத்தைக் கட்டியெழுப்புவதே சமபோஷவின் ஊடான எமது முயற்சியின் நோக்கமாகும். இதற்மைய “தினன தருவோ” என்ற தொனிப்பொருளின் கீழ் நிறுவனம் என்ற ரீதியில் நாம் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்து பாடசாலை மட்ட வீர வீராங்களைகளைத் தேசிய மட்டத்தி்குக் கொண்டு செல்லத் தேவையான அடித்தளத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்குகின்றோம். இது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றார்.
ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த எதிர்கால சந்ததியை உருவாக்குவதில் சக்தியளிக்கும் வகையில் சிறந்த காலை உணவை வழங்குவது தொடர்பில் சமபோஷ தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றது. எதிர்கால சந்ததியினர் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துடன் நோக்குடன் முன்னெடுக்கப்படும் சமபோஷ ‘தினன தருவோ” நிகழ்ச்சித்திட்டம் CBL நிறுவனத்தின் கூட்டு சமூகப் பொறுப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
Be First to Comment