Press "Enter" to skip to content

Iconic Awards விருது விழாவில் நான்கு விருதுகளை வென்றுள்ள Dearo Investment

நிதித்துறையின் புத்தாக்கம் எனும் பெருமையை பெற்றுள்ள நிதித்துறையின் முதன்மை நிறுவனமாக திகழும் Dearo Investment நிறுவனம் Iconic Awards 2024 விருது விழாவை அலங்கரிக்கும் வகையில் ஆண்டின் சிறந்த கருத்திட்ட உற்பத்தி வழங்குநர், ஆண்டின் சிறந்த கருத்திட்ட நிதி நிறுவனம், ஆண்டின் சிறந்த அபிவிருத்தி முதலீட்டு நிறுவனம் மற்றும் ஆண்டின் சிறந்த வாடிக்கையாளர் வழங்குநர் ஆகிய நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. நிதி சார்ந்த பிரச்சனைகளுக்கு புத்தாக்க டிஜிட்டல் நிதித்தீர்வுகளை வழங்கும் நிறுவனம் என்ற புகழை பெற்றுள்ள Dearo Investment நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக தனியார் மற்றும் தொழில்முயற்சி நிதிச்சேவைகள், பல்வேறு கடன்களும் முதலீட்டுத் தீர்வுகளும், தொழில்முயற்சி மூலதனத்தை உயர்த்துவதற்கு தொழில்முயற்சி கடன்களும் சிறிய மற்றும் மத்தியளவிலான தொழில்முயற்சியாளர்களும், கூட்டுத் தொழில்முயற்சி மற்றும் ஆரம்ப மட்டத்தில் காணப்படும் தொழில்முயற்சிகளுக்கு தேவையான நிதி வசதிகளை அளித்தல் போன்ற சேவைகள் அவற்றில் முதன்மையானவை ஆகும். இலங்கை முழுவதுமாக விரிந்து பரந்துள்ள 30 இற்கும் மேற்பட்ட கிளைகளுடன் கூடிய வலையமைப்பை கொண்டுள்ள Dearo Investment கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி தமது புதிய கிளை அலுவலகத்தை பொலனறுவையில் திறந்துள்ளதோடு மேலும் பல நகரங்களில் நிதித் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளது.

நுண், சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் Dearo Investment தற்பொழுது தமது வர்த்தக நடவடிக்கைகளை நிதி, சட்டம், உணவு பானங்கள், சுற்றுலா, கல்வி, தகவல் தொழில்நுட்பம், வாகனங்கள், கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டம் போன்ற துறைகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. Dearo Investment நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி/முகாமைத்துவப் பணிப்பாளர் திரு பிரசன்ன சஞ்சீவ வங்கியியல் மற்றும் நிதித் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தை கொண்டதொரு தொழில் வல்லுனர் ஆவார். பேராதெனிய பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் தொடர்பான முதல் பட்டப்படிப்பையும் முதுகலை பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ள அவர் கடன் முகாமைத்துவம், வங்கியியல் மற்றும் நிதித்துறை தொடர்பான டிப்ளோமா பாடநெறியையும் பூர்த்தி செய்துள்ளார். இவருடைய நிர்வாகத்தின் கீழ் பிரபாஷ் குணரத்ன, உபுல் எதிரிசூரிய, தரிந்து தனஞ்சய சமரவிக்கிரம, நெரஞ்சன் வர்ணசூரியவுடன் மனித வள மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் திலினி கல்ஹாரி ஏக்கநாயக்க ஆகியோரை கொண்ட அனுபவமிக்க பணிப்பாளர் சபையின் முழு ஒத்துழைப்புடன் இயங்கும் இந்நிறுவனம் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *