Press "Enter" to skip to content

ஜா–எல VIMAN வீட்டுத் தொகுதியின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட முன்னரே அதன் விற்பனையின் மூலம் 4.2 பில்லியன் ரூபா இலக்கை அடைந்த John Keells Properties

தொடர்மாடிக் குடியிருப்பின் கட்டுமானப் பணிகள் 2024 ஓகஸ்ட் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட முன்னர் அதன் விற்பனை மூலம் 4.2 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. இது John Keells Properties நிறுவத்தின் குறிப்பிடத்தக்க அடைவாக அமைவதுடன், முதலீட்டாளர்கள் மற்றும் வீட்டை வாங்குவோரின் உறுதியான அக்கறையைக் கோடிட்டுக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

ஜா–எல VIMAN என்பது மற்றுமொரு குடியிருப்புத் தொகுதித் திட்டமல்ல இது, புறநகர் பகுதியில் இயற்கையின் அமைதியில் வாழக்கூடிய வகையிலான தனித்துவ வடிவமைப்பாகும். 6 ஏக்கர் நிலப்பரப்பு விஸ்தீரணத்தில் 65% திறந்த வெளிகள் மற்றும் வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டிருபு்பதுடன், ஜா–எல VIMAN என்பது சாதாரண தொடர்மாடிக் குடியிருப்புக்கு அப்பாற்பட்டதாகும். தியான கூடம், சிறுவர்கள் விளையாட்டு இடம், வெளியக விளையாட்டுக் கூடம் மற்றும் சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபாதைக்கான இடம் போன்ற 15ற்கும் அதிகமான வசதிகள் முழுமையான வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதை நோக்காகக் கொண்டவை. இந்தத் திட்டத்தின் வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த, John Keells Properties நிறுவனத்தின் ஆதனைத் துறையின் தலைவரும், John Keells குழுமத்தின் நிறைவேற்று பிரதித் தலைவருமான இனோக பெரேரா குறிப்பிடுகையில், “புதிய உலகத்தை உருவாக்குதல் என்ற எமது நோக்கத்துடன் பொருந்தும் வகையில் புறநகர் குடியிருப்பு சந்தையை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட John Keells Properties நிறுவனத்தின் முதலாவது முயற்சியே இதுவாகும். வீடுகள் மட்டுமல்ல, இயற்கையோடு இணக்கம், சூழல் உணர்வுள்ள வாழ்க்கை மற்றும் சமூக விழுமியங்கள் செழித்து வளரும் ஒரு வாழ்க்கை முறையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜா–எல VIMAN என்பது குடியிருப்பு மாத்திரமல்ல, இயற்கையோடு இணக்கம், சூழல் உணர்வுள்ள வாழ்க்கை மற்றும் சமூக விழுமியங்கள் செழித்து வளரும் ஒரு வாழ்க்கை முறையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். நவீன வசதிகள் மற்றும் அமைதியான சூழல் ஆகியவற்றை சமநிலையுடன் வழங்கும் சரணாலயமாக இது அமையும்” என்றார்.

மிகவும் எதிர்பார்ப்புடன் 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட VIMAN ஜா–எல குடியிருப்புத் திட்டம் வீட்டைக் கொள்வனவு செய்பவர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை மிகவும் விரைவிலேயே பெற்றுக்கொண்டது. முதல் இரண்டு கட்டங்களில் 75% ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டிருப்பதுடன், இதன் கட்டுமானம் நகர்புர வாழ்வியலுக்குப் புதியதொரு எல்லையாக அமைகின்றது. இத்திட்டத்திற்குக் காணப்படும் அதிக கேள்வி John Keells Properties நிறுவனம் தொடர்பில் கொண்டுள்ள நம்பிக்கையைப் பறைசாற்றுகின்றது. John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும், John Keells Group இன் பிரதித் தலைவருமான நதீம் ஷம்ஸ் தெரிவிக்கையில், “எதிர்பாராத வரவேற்புக் காரணமாக கட்டுமானத்திற்கு முன்னரே 4.2 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டிருப்பதுடன், இது VIMAN ஜா–எல திட்டத்தின் பலத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது. நிலைப்புத் தன்மை, அணுகல் மற்றும் சமூகத்தின் வலுவான உணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியைத் தொடங்குவதில் நாம் பெருமிதம் அடைகின்றோம்” என்றார்.

நிலைபேறு தன்மை என்பது VIMAN ஜா–எல திட்டத்தின் மையமாக அமைந்திருப்பதுடன், சூழலுக்கு நட்பான வாழ்க்கைச் சூழலை வழங்குவதில் John Keells Properties நிறுவனம் அர்ப்பணிப்புடன் இருப்பதையும் இது பறைசாற்றுகின்றது. சூரிய சக்தியில் இயங்கும் வீடுகள், இலத்திரனியல் வாகன சார்ஜிங் நிலையங்கள், பசுமையான இடங்கள் என்பன இத்திட்டம் வலுசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பில் அக்கறைகொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. மூலோபாய அமைவிடத்தில் இத்திட்டம் அமைந்துள்ளது. பேரங்காடிகள், உணவகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக அணுகலுக்கான நெடுஞ்சாலை உட்பட முக்கிய நெடுஞ்சாலைகளுக்கான வசதிகளைக் கொண்ட நகரத்தையும் நகர்புறத்தையும் இணைக்கும் மையமாக VIMAN ஜா–எல திட்டம் அமைகின்றது.

இதிட்டத்தின் முதலாம் இரண்டாம் கட்டங்களில் 75% தொடர்மாடிகள் ஏற்கனவே பெறப்பட்டிருப்பதுடன், இந்த தனித்துவமான சமூகம் என்ன வழங்குகிறது என்பதை ஆராய இது ஒரு அற்புதமான நேரமாகும். நவீன வாழ்க்கை மற்றும் இயற்கைச் சூழல் ஆகிய சிறந்த கலவையை உறுதியளிக்கும் VIMAN ஜா–எல திட்டத்தில் இன்னமும் குறைந்தளவு தொடர்மாடிகளே எஞ்சியுள்ளன. மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள அல்லது விஜயமொன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு 0706 068 068 என்ற இலக்கத்தில் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும் அல்லது www.viman.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும்.

“புதிய உலகத்தை உருவாக்குதல்” என்ற நோக்கத்தைக் கொண்ட John Keells Properties நிறுவனம், The Emperor, The Monarch, 7th Sense, OnThree20, TRI-ZEN மற்றும் Cinnamon Life Integrated Resort போன்ற ஆதனத்துறைத் திட்டங்களின் முன்னணி நிறுவனமாகத் திகழ்கின்றது. Cinnamon Life at City of Dreams என்பதை மையாகக் கொண்டு சொகுசு ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் காணப்படுகின்றன. VIMAN ஜா–எல திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஊடாக இலங்கையின் வாழ்க்கைத் தரத்தை மறுவரையறை செய்வதைத் தொடர்ந்து, இயற்கை, நிலைபேறு தன்மை மற்றும் நவீன வசதிகளை ஒன்றிணைத்து புறநகர் சந்தையை நோக்கி நிறுவனம் தனது செயற்பாட்டை விஸ்தரிக்கின்றது.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *