Press "Enter" to skip to content

12 மாத காலப்பகுதியினுள் SLINTEC இனால் 8 காப்புரிமைகள் மற்றும் 12 புத்தாக்கங்கள் வணிகமயப்படுத்தப்பட்டுள்ளன

● 2024 இல் இதுவரை பதிவாகிய உயர்ந்த காப்புரி்மைகளை வணிகமயப்படுத்தியுள்ளது
● SLINTEC’இன் graphite-அடிப்படையிலான காப்புரிமையினூடாக, அபு தாபியின் சமுத்திர துப்புரவாக்கல் செயன்முறைக்கு புத்தாக்கமளிக்கவுள்ளது
● SLINTEC இயற்கை சாயம் (dye) காப்புரிமைகள் ஆடை ஏற்றுமதிகள் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்யும்

இலங்கை நனோதொழினுட்ப நிறுவகம் (SLINTEC) நான்கு காப்புரிமைகளை வணிக மயப்படுத்தியுள்ளதுடன், மேலும் நான்கு (4) புத்தாக்கங்கள் வணிக மயப்படுத்தும் இறுதிக் கட்டத்தை எய்தியுள்ளதாக அறிவித்துள்ளது. முதலீட்டு வங்கியாளர் மற்றும் PPP நிபுணருமான திரு. திலான் விஜேசிங்க 2022 செப்டெம்பர் மாதம் SLINTEC இன் தவிசாளராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கலாநிதி. துஷார வஜிர பெரேரா (அமெரிக்காவின் Pfizer Inc., இன் முன்னாள் சிரேஷ்ட விஞ்ஞானி மற்றும் MAS இன் சுகாதார விஞ்ஞானம் மற்றும் தொழினுட்ப பணிப்பாளர்) பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, SLINTEC சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்துள்ளதுடன், நிதித் தன்னிறைவையும், இலங்கையின் தொழிற்துறைசார் புத்தாக்க கட்டமைப்புக்கு பெருமளவு பங்களிப்பையும் வழங்குகின்றது.

2023 ஆம் ஆண்டில் SLINTEC இல் தலைமைத்துவ மாற்றம் ஏற்படுவதற்கு முன்னதாக, 2008 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டு 16 வருட கால வரலாற்றில், நிறுவனத்தினால் ஏழு (7) காப்புரிமைகள் மற்றும் புத்தாக்கங்கள் மாத்திரமே வணிக மயப்படுத்தப்பட்டிருந்தன. அதனூடாக சராசரியாக வருடமொன்றில் இரண்டுக்கும் குறைவான வணிக மயப்படுத்தல்களை மாத்திரமே அமைப்பு மேற்கொண்டிருந்தது. மேலும், 2022 ஆம் ஆண்டு வரையில், SLINTEC பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. அதில் நான்கு (4) வருட காலப்பகுதியினுள் 80 க்கும் அதிகமான விஞ்ஞானிகளை இழந்திருந்ததுடன், நிதி நெருக்கடிகள் காரணமாக செயற்பாட்டு நிலைபேறாண்மையும் பாதிக்கப்பட்டிருந்தது.

இன்று, நிறுவனத்தின் பெருமளவு வளர்ச்சியில், நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் அணியினருக்கு தலைமைத்துவமளிக்கும் கலாநிதி. பெரேரா போன்றவர்களின் செயற்பாடுகள் பங்களிப்பு வழங்குவதுடன், விஞ்ஞான ரீதியான புத்தாக்கங்களை பிரயோக ரீதியான, சந்தையில் தயார்நிலையில் கொள்ளக்கூடிய புத்தாக்கங்களாக மாற்றியமைத்துக் கொள்ளவும் முடிந்துள்ளது.

SLINTEC இன் தவிசாளர் திரு. திலான் விஜேசிங்க குறிப்பிடுகையில், “2024 ஆம் ஆண்டில் SLINTEC இன் வருமானம் சாதனைப் பெறுமதிகளை எய்தியிருந்ததுடன், 2025 இல் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கின்றோம். செயற்பாடுகளுக்கு ஏற்படும் நாளாந்த செலவுகளுக்காக அரசாங்க நிதியை எதிர்பார்த்திராத ஒரே ஆய்வு சார் அமைப்பாக SLINTEC மாத்திரம் திகழ்கின்றது. நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை தேசிய விஞ்ஞான மையம் மற்றும் 50 சதவீத உரிமையை தனியார் துறை நிறுவனங்களான MAS, LOLC, Brandix மற்றும் Hayleys ஆகியன கொண்டுள்ளன. பொது – தனியார் கைகோர்த்து, இலங்கையில் விஞ்ஞான புத்தாக்கங்களை முன்னேற்றுவதற்கான சிறந்த மாதிரி எடுத்துக்காட்டாக SLINTEC அமைந்துள்ளது.” என்றார்.

இயற்கை சாய (dyes) வகைகள் தொடர்பான ஆய்வு மற்றும் விருத்தி செயற்பாடுகளினூடாக நிலைபேறாண்மைக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் இந்தப் பிரிவில் SLINTEC ஐ முன்னோடியாக திகழச் செய்யும் நோக்கில் இந்த மூலோபாய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன், இலங்கையின் ஆடைத் தொழிற்துறையில் புத்தாக்கத்தையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதில் பங்களிப்பு வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது. அதனடிப்படையில், தென்னம்மட்டை மற்றும் பாம் ஒயில் நீர்-சார் இயற்கை சாயங்கள் அடங்கலாக இரு காப்புரிமைகள் ஏற்கனவே வணிக மயப்படுத்தப்பட்டுள்ளன. சோளமட்டை போன்ற விவசாய கழிவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொதியிடல் மூலப்பொருள் சார் காப்புரிமையும் வணிக மயப்படுத்தப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகள் தொடர்பில் SLINTEC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி. துஷார பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “ஆய்வு மற்றும் விருத்தியின் கட்டமைக்கப்பட்ட வணிக மயமாக்கலினூடாக, இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த விஞ்ஞான அடிப்படையிலான சொத்தாக SLINTEC ஐ மாற்றுவது எமது நோக்காகும். நவீன ஆய்வுகள் மற்றும் நிலைபேறாண்மை அடிப்படையிலான புத்தாக்கங்களுக்கான மையமாக SLINTEC ஐ வழிநடத்த நாம் எதிர்பார்ப்பதுடன், தொழிற்துறை, உள்நாட்டு மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள், ஆய்வு மற்றும் விருத்தி அமைப்புகள் போன்றவற்றுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் பங்காண்மைகளை ஏற்படுத்தி இயங்க எதிர்பார்க்கின்றது. தாதுப் பொருட்கள், விவசாயம் மற்றும் ஏற்றுமதி உற்பத்தி போன்ற பல பிரிவுகளை உள்வாங்கி இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.” என்றார்.

 

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *