Press "Enter" to skip to content

நான் இலங்கைத் தொழில்முனைவோர்களில் ஒருவன் 2024

இலங்கை தொழில்முனைவோர் சங்கம் (COYLE) பெருமையுடன் வழங்கும் I AM the Sri Lankan Entrepreneur 2024 இது நாட்டின் மிகச்சிறந்த தொழில்முனைவோரைக் கொண்டாடுவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மதிப்புமிக்க விருது வழங்கும் மாலை நிகழ்வாகும். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விஷேட நிகழ்வானது. இலங்கையின் தொழில்துறைகளை முன்னோக்கி கொண்டு சென்ற துணிச்சலான தூரநோக்கும், புத்தாக்க திறனும் கொண்டவர்களை கௌரவிக்கும் வகையில் அமையவுள்ளது.

இந்த ஆண்டுக்கான விருதுகள், இத்தீவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் விண்ணப்பிப்பவர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. இது தொழில்முனைவோரின் உண்மையான தேசிய கொண்டாட்டத்தை பிரதிபளிக்கிறது, மாகாணம் முதல் மாவட்ட மட்ட அங்கீகாரம் வரை, இந்த முயற்சியானது. இலங்கை வர்த்தகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கின்ற தொழில் முனைவோரின் திறமையை எடுத்துக்காட்டுகிறது. சிறந்த இளம் தொழில்முனைவோர். சிறந்த பெண் தொழில்முனைவோர். சிறந்த சமூக தொழில்முனைவோர் மற்றும் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் போன்ற பல்வேறு பிரிவுகளில் 65 க்கும் மேற்பட்ட விருதுகளுடன், இந்த நிகழ்வு திறமை மற்றும் சாதனைகளின் எழுச்சியூட்டும் காட்சியாக அமையப்பெறவுள்ளது.

நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் மதிப்பீட்டு செயல்முறையானது இலங்கையின் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன குழுலான எர்னஸ்ட் & யங் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் சிறந்து விளங்கும் இலங்கையின் மிகவும் நம்பகமான அங்கீகாரங்களில் ஒன்றாக இவ்விருதின் நற்பெயரை வலுப்படுத்துவதற்கு இவ்வணுகுமுறையானது நிச்சயம் வழிவகுக்கும்.

COYLE இன் யங் லங்கன்ஸ் இன் முயற்சியால் வழங்கப்படவிருக்கும் இவ்விருதுகள் அடுத்த தலைமுறை தலைவர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. வளர்ந்து வரும் தொழில்முனைவோரை அங்கீகரிப்பதன் மூலமும், இளம் கண்டுபிடிப்பாளர்களை மேம்படுத்துவதன் மூலமும், வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை வளர்ப்பதன் மூலமும் COYLE ஒரு வலுவான மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை கொணிட வணிக தளத்திற்கு வழி வகுக்கிறது.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *