Press "Enter" to skip to content

‘சமபோஷ மாகாண மட்டப் பாடசாலை விளையாட்டுப் போட்டி 2023’ எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 5 மாகாணங்களில் 18,000 வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஆரம்பமாகும்

CBL நிறுவனத்தின் உப நிறுவனமான Plenty Foods (Pvt) Limited நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பான இந்நாட்டின் பிரபல்யமான தானிய உணவான சமபோஷவின் வலுவூட்டலுடன் ஊவா, வடமத்தி, கிழக்கு, வடமேல் மற்றும் தெற்கு ஆகிய 5 மாகாணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் ‘2023 சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி’ எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி ஆரம்பமாகும்.

சமபோஷவின் அனுசரணையுடன், மாகாணக் கல்வி அலுவலகங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாகாணத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகள் 5 மாகாணங்களைப் பிரதானப்படுத்தி தனித்தனியாக ஓகஸ்ட் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் முழுவதிலும் நடைபெறவுள்ளன.

இதில் 70ற்கும் மேலான போட்டி நிகழ்வுகளில் 650ற்கும் அதிகமான பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 18,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். வெற்றிபெறும் பாடசாலைகள் மற்றும் வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் என்பன வழங்கப்படவுள்ளன.

இந்தப் போட்டிகள் குறித்து கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின் விளையாட்டுப் பணிப்பாளர் (சுகாதாரம், உடல் கல்வி மற்றும் விளையாட்டு) உபாலி அமரதுங்க குறிப்பிடுகையில், “எதிர்கால சந்ததியினர் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் மாணவர்கள் தேசிய மட்டத்தை அடைவதற்கு CBL வழங்கிவரும் ஒத்துழைப்பை உண்மையில் பாராட்டுகின்றோம்” என்றார்.

வடமேல் மாகாணத்தின் போட்டி இதன் முதலாவது போட்டியாக ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வென்னப்புவ அல்பேர்ட்.எப்.பீரிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடமேல் மாகாணத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (சுகாதாரம், உடல் கல்வி மற்றும் விளையாட்டு) டபிள்யூ.எம்.எச்.கே.அபேகோன் குறிப்பிடுகையில், “தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியானது புதிய தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை விளையாட்டு வீரர்கள் தங்கள் திறன்களை மேலும் அறிந்து கொள்ளவும், விளையாட்டு வீரர்கள் என்ற பெருமையை வளர்த்துக்கொள்ளவும், அந்த பெருமையின் மூலம் இந்த நாட்டிற்கு புகழைக் கொண்டுவரும் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களாக உருவாவதற்கு வழங்கப்படும் உதவி பாராட்டத்தக்கது” என்றார்.

இதன் இரண்டாவது போட்டியாக ஊவா மாகாணப் போட்டிகள் பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதானத்தில் செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் 04ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதுடன், ஊவா மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் (விளையாட்டு) ஏ.எச்.ஜீ.சன்ன கருணாதாச இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “அடிமட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு முன்னேற முயற்சிக்கும் பிள்ளைகளை ஊக்குவிப்பதற்கு எமக்கு அனுசரணை வழங்கி இந்தப் போட்டிகளை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்ல சமபோஷவே முன்வந்தது” என்றார்.

மூன்றாவது விளையாட்டுப் போட்டியாக வடமத்திய மற்றும் தென் மாகாண விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன. வடமத்திய மாகாண விளையாட்டுப் போட்டிகள் அனுராதபுரம் பொது விளையாட்டரங்கிலும், தென் மாகாண விளையாட்டுப் போட்டிகள் பெலியத்த டி.ஏ. ராஜபக்ஷ கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இது தொடர்பில் வடமத்திய மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) எம்.ஏ.டி.சி மாபலகம தனது கருத்துக்களை பின்வருமாறு தெரிவித்தார். “வடமேற்கு மாகாண சிறுவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், தேசிய அரங்கில் அவர்கள் காலடி எடுத்து வைப்பதற்கு தேவையான இடத்தை வழங்கவும் ஐந்தாண்டுகளாக சமபோஷ செயற்பட்டு வருகின்றது. மிகுந்த சிரமங்களைச் சகித்துக்கொண்டு, விளையாட்டில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு முன்னேறிச் செல்வதற்குத் துணையாக இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுசரணையை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என்றார்.

தென் மாகாண விளையாட்டு போட்டிகள் குறித்துக் கருத்து தெரிவித்த மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) பி.எம்.கிருஷான் துமிந்த கூறியதாவது: “தென் மாகாண கல்வித் திணைக்களத்தின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் இந்த தென்மாகாண விளையாட்டுப் போட்டிக்கு சமபோஷ வர்த்தகநாமம் குறிப்பாக சிறுவர்களின் விளையாட்டு, கல்வி மற்றும் ஊட்டச்சத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து சகலரின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

இறுதி விளையாட்டு நிகழ்வான கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) ஈ.பி.ஜி.ஐ.தர்மதிலக கருத்துத் தெரிவிக்கையில், “பல வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்க வந்துள்ள முதலாவது அனுசரணையாளர் சம்போஷா ஆகும். இந்த விளையாட்டுப் போட்டிகள் கிழக்கு மாகாணத்திற்கு சிறந்த அடித்தளமாக அமையும். உள்நாட்டுத் தயாரிப்பொன்று நாட்டின் சிறுவர்களை மேம்படுத்துவதற்கு ஆற்றிவரும் சேவை விபரிக்க முடியாத மகிழ்ச்சிய வழங்குகிறது. அவர்களுக்கு நன்றி” என்றார்.

CBL உணவுக் கொத்தணியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிலங்க.டி சொய்சா கருத்துத் தெரிவிக்கையில், விளையாட்டு வீர வீராங்கனைகளின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மற்றும் பலம் அவசியம் என்பது போன்று அர்ப்பணிப்பு, பொறுமை, தன்னம்பிக்கை, ஒழுக்கம் போன்ற குணங்களும் அவசியம். இதன் ஊடாக சிறந்த ஆளுமை கொண்ட தலைவர்களை உருவாக்க முடியும்” என்றார்.

CBL உணவுக் கொத்தணியின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் சசி பெர்னாந்து பின்வருமாறு கூறினார். “சமபோஷ எடுக்கும் இந்த முயற்சியானது ஊட்டச்சத்தை மாத்திரம் அதிகரிப்பது அல்ல, தன்னம்பிக்கை கொண்ட சகல திறமைகளுடன் முன்னேறும் இளம் சமுதாயத்தை உருவாக்குவதாகும். இதற்கு அமைய ‘தினன தறுவா’ தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மட்டத்தில் இந்தப் போட்டிகளை நடத்தி அதிலுள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான அடித்தளத்தை அமைப்பதில் பங்களிப்பதில் நிறுவனம் என்ற ரீதியில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

எதிர்கால சந்ததியினருக்கு முழு ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய கொண்ட காலை உணவு கிடைப்பது குறித்து சமமபோஷ கவனம் செலுத்தியுள்ளது. எதிர்கால சந்ததியினர் உடல் மற்றும் உள ரீதியாக ஆரோக்கியம் மிக்கவர்களாக இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் CBL சமபோஷவினால் முன்னெடுக்கப்படும் ‘தினன தறுவோ’ நிகழ்ச்சித்திட்டம் CBL இன் சமூகக் கூட்டுப்பொறுப்பு நிகழ்ச்சித் திட்டத்தொடரில் ஒன்றாகும்.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *