ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ், கொமர்ஷல் வங்கி பிஎல்சியுடன் மூலோபாய பங்காண்மையினூடாக இணைந்து TRI-ZEN Apartmentsகளுக்கு ‘Freedom Mortgage’ திட்டத்தை மீள அறிமுகம் செய்துள்ளது. இந்த வீட்டு நிதியளிப்பு தீர்வின் அங்கமாக, ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பத்தில் 20% தொகையை செலுத்தி, அடுத்த 6 மாதங்களுக்கு எவ்விதமான கொடுப்பனவுகளையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. தொடர்மனை ஒன்றை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்போருக்கும், முதலீட்டாளர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட நிதிசார் நெகிழ்ச்சித்தன்மையை அனுபவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
Freedom Mortgage இனூடாக, சொத்துக்கள் உரிமையாண்மையுடன் தொடர்புபட்டுள்ள நிதிச் சவால்களை தணிக்க எதிர்பார்க்கப்படுவதுடன், கொள்வனவாளர்களுக்கு அடைமான மீளச் செலுத்தல்கள் தொடர்பில் உடனடிச் சுமையின்றி, தொடர்மனை ஒன்றின் உரிமையாளராகக்கூடியதாக இருக்கும். இந்த புத்தாக்கமான தீர்வினூடாக, ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் நிறுவனத்தின் வதிவிட ரியல் எஸ்டேட் பிரிவை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்படுவதுடன், பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களின் தேவைகளையும் கனவுகளை நிறைவேற்றவும் முன்னுரிமை வழங்கக்கூடியதாக உள்ளது.
இந்தத் திட்டத்துக்கு பதிலளிக்கும் வகையில், ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உப தலைவருமான நதீம் ஷம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “சில வருடங்களுக்கு முன்னர் நாம் முன்னெடுத்திருந்த சொத்து அடைமானத் திட்டத்தை மீள அறிமுகம் செய்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். குறைந்து செல்லும் வட்டி வீதங்களுடன், ரியல் எஸ்டேட் வியாபாரம் மீது அதிகளவு நாட்டம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அதிகளவு வரி அறவிடப்படும் நிலையான வருமான மூலங்களுக்கு பதிலாக இது கவர்ச்சிகரமான மாற்றுத் தெரிவாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன், மேம்படுத்தப்பட்ட நிதி நெகிழ்ச்சித்தன்மையையும் வழங்கி, தமது புதிய இல்லங்களுக்கு சீராக, மன நிம்மதியுடன் மாறிக் கொள்வதற்கு வாய்ப்பை வழங்குகின்றோம். இந்த மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதிக்கான சலுகையினூடாக, Freedom Mortgage வழங்கும் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதுடன், கவர்ச்சிகரமான அடைமானத் திட்டத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.” என்றார்.
கொமர்ஷல் வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் ஹசரத் முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “சொத்துகள் வடிவமைப்புத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அனுகூலங்களை வழங்குவதில் நாம் முன்னோடியாக அமைந்திருப்பதுடன், TRI-ZEN apartment உடன் கைகோர்த்து, வாடிக்கையாளர்களுக்கு கொமர்ஷல் வங்கியின் வீட்டுக் கடன் வசதியின் பயன்களை வழங்க முன்வந்துள்ளதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியின் ஆதரவும், செலவுச் சிக்கனத்துடன், எந்தவொரு கொள்வனவாளருக்கும் அவர்களின் கனவை நனவாக்கிட மன உறுதியை வழங்குவதாக அமைந்துள்ளது.” என்றார்.
Freedom Mortgage இல் காணப்படும் நிதிசார் அனுகூலங்களுக்கு மேலதிகமாக, TRI-ZEN Apartments களினால் நகர் வாழ் குடியிருப்பாளர்களின் மாறுபடும் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு வாழிடப் பகுதிகள் வழங்கப்படுகின்றன. smart tech integration க்காக கீழ் மாடியிலிருந்து பொறியியல் ரீதியில் TRI-ZEN வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்பாளர்களுக்கு சௌகரியமான வாழ்க்கை முறையை கொழும்பின் வியாபார மற்றும் களிப்பூட்டும் அம்சங்கள் நிறைந்த மையப்பகுதியில் முன்னெடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த தொடர்மனையின் அமைவிடம் வீட்டு உரிமையாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. கொழும்பின் பிரதான பொதுப் போக்குவரத்து பகுதிகள், வியாபார மையங்கள், கல்வி நிலையங்கள், சுகாதார பராமரிப்பு வசதிகள், புகழ்பெற்ற வழிபாட்டுத்தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் பெருமளவு களிப்பூட்டும் பகுதிகள் போன்றவற்றை அண்மித்து குறுகிய நேரத்தில் பயணிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
Be First to Comment