Press "Enter" to skip to content

RE/MAX Sri Lanka தனது குறிக்கோளையும், ஆற்றலையும் புதுப்பித்துப் பயணிக்கவுள்ளது

இலங்கையில் ஆதனத் துறையில் (ரியல் எஸ்டேட்) மிகவும் ஆர்வமூட்டுகின்ற ஒரு செய்தியாக, RE/MAX Sri Lanka நிறுவனம் தற்போது புதிய தலைமைத்துவத்தின் கீழ் புத்தாக்கம் மற்றும் மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் காலடியெடுத்து வைக்கவுள்ளது. அந்த வகையில் கொழும்பிலுள்ள சினமன் கிரான்ட் ஹோட்டலில் வெகு விமரிசையாக இடம்பெற்ற RE/MAX Sri Lanka 2.0 என்ற தனித்துவமான நிகழ்வில் புதுப்பிக்கப்பட்ட குறிக்கோள் மற்றும் ஆற்றலுடன் முன்னோக்கிப் பயணிக்கவுள்ளதை RE/MAX Sri Lanka நிறுவனம் அறிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டில் இலங்கையில் முதல்முறையாக செயல்பட ஆரம்பித்த RE/MAX Sri Lanka நிறுவனம், நான்கு முக்கியமான இடங்களில் தனது அலுவலகங்களை அமைத்து, நாட்டில் வீடு மற்றும் காணிகளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கினை ஏற்படுத்தியிருந்தது. ரஜீவ் கோணேஸ்வரன், ஷசீவன் கணேசானந்தன் மற்றும் சஜீவ் எட்வேர்ட் ஆகியோரின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் தற்போது இக் கிளை நிறுவனம் இது வரை கண்டிராத வளர்ச்சி மற்றும் வெற்றியை நோக்கிப் பயணிக்கத் தயாராகியுள்ளது. முகவர்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தல், வாடிக்கையாளர்களின் திருப்தி மட்டத்தை உறுதி செய்தல் மற்றும் சந்தையில் தனது இருப்பினை அதிகரிக்கும் வகையில் வணிக செயல்பாடுகளை விஸ்தரித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இலக்குடன் இந்நிறுவனம் செயல்படவுள்ளது.

1973 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட RE/MAX நிறுவனம், உலகளாவில் ஒரு முன்னணி ஆதன நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது. வணிக உரிமை கட்டமைப்புடன் செயல்பட்டு வருகின்ற இந்நிறுவனம் முகவர்கள் மற்றும் தரகர்கள் தாமாகவே தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வலுவூட்டப்பட்டவர்களாக, உலகளாவிய ஆதரவை வழங்கி வருகின்றது. முகவர்களை மையமாகக் கொண்ட RE/MAX இன் வணிகக் கோட்பாடு, இத்துறையில் திறமைசாலிகளை ஈர்த்து, மகத்துவம், தொழில் சார் நேர்த்தி மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை வளர்க்கின்றது. வணிகம் என்பதற்கும் அப்பால் சமூக ஈடுபாட்டிலும் இந்நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது. தொழில்நுட்பத்தின் அனுகூலத்தைப் பயன்படுத்தி, முகவர்களுக்கு தேவையான புத்தாக்கமான வளங்களை ஏற்பாடு செய்து, ஆதனத் தொழில்துறைக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்து, நம்பிக்கை, நிபுணத்துவம், மற்றும் உலகளாவிய பிரசன்னம் ஆகியவற்றின் அடையாளமாக மாறி, ஆதன உலகில் ஒரு சர்வதேச செயல்பாட்டாளராக மாறவுள்ளது.

இரு தசாப்த கால நீண்ட அனுபவம் கொண்ட RE/MAX தரகர்/உரிமையாளரான ரஜீவ் கோணேஸ்வரன் அவர்கள், கடந்த தசாப்தத்தில் டொரோன்டோ, ஒன்டாரியோ நகரிலுள்ள RE/MAX சமூகத்தை வெற்றிகரமாக வளர்ச்சிப்பாதையில் இட்டுச்சென்று, பல அலுவலகங்களைக் கொண்ட தரகுச்சேவை கட்டமைப்பாக மாற்றியுள்ளார். புதிய வாய்ப்புக்களை ஆராய்தல் மற்றும் புதிய சவால்களை கையிலெடுக்கும் துணிவு ஆகியன இப்புதிய அத்தியாயத்தில் RE/MAX Sri Lank ஐ வழிநடாத்திச் செல்வதற்கு மிகவும் பொருத்தமானவராக ஆக்கியுள்ளது.

சர்வதேச மட்டத்தில் வர்த்தக அனுபத்தைக் கொண்டுள்ள ஷசீவன் கணேசானந்தன் அவர்களும் இதில் இணைந்துள்ளதுடன், இப்பிராந்தியத்தில் தொழில்நுட்ப மற்றும் வணிக செயல்பாட்டு சேவைகளை வழங்கும் பணிகளை முன்னெடுப்பார். சந்தைப்படுத்தல், கூட்டாண்மைகள், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் அனுபவங்களைக் கொண்ட சஜீவ் எட்வேர்ட் அவர்களின் வகிபாகம் ஆதனத் தொழில்துறைக்கு விலைமதிப்பற்ற ஒன்றாக அமையும் என்பது உறுதி. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இலங்கையில் ஆதனத் தொழில்துறையில் நிரந்தரமான முத்திரையைப் பதிக்கும் நோக்குடன் செயல்படவுள்ளனர்.

மூவரும் அடங்கிய தலைமைத்துவ அணி கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், “RE/MAX Sri Lanka இன் பாரம்பரிய மகத்துவத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று, மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் எமது தற்போதைய மற்றும் எதிர்கால கிளை அலுவலகங்களுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆவலாக உள்ளோம். புதுப்பிக்கப்பட்ட எமது குறிக்கோளையும், ஆற்றலையும் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் அதேவேளை, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு திறன்மிக்க பங்களிப்பை வழங்கும் துறைக்கு உதவி, எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கையும், நன்மதிப்பும் மிக்க ஆதன சேவைகள், தகவல் மற்றும் ஆதரவை வழங்குவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். RE/MAX Sri Lanka இன் புதிய அத்தியாயத்தில் எம்முடன் கைகோர்க்குமாறு அனைத்து ஆதன நிர்மாணிப்பாளர்கள், வணிகங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றோம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.

www.remax.lk என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது 0117001700 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியோ RE/MAX Sri Lanka தொடர்பான கூடுதல் தகவல் விபரங்கள் மற்றும் புதிய கூட்டாண்மைகளை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்வது ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். சர்வதேசரீதியாக அங்கீகாரம் பெற்ற வணிக உரிமையின் பக்கபலத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட குறிக்கோள் மற்றும் ஆற்றலுடன் இலங்கையின் ஆதனத் தொழில் துறையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட RE/MAX Sri Lanka தற்போது தயாராகவுள்ளது.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *