SLIIT நிறுவனம் தூரநோக்க சிந்தனையுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்ப பட்டக் கற்கைநெறிகளுடன் கணினிக் கல்வியில் தொடர்ந்தும் தலைவர் என்பதை நிலைநிறுத்தி வருகின்றது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பத் திறமைகளை வழிநடத்தும் பெருமைக்குரிய மரபை உறுதிப்படுத்தும் வகையில் இன்று இந்த நிறுவனம் கணினிக் கல்வியில் தேசத்தின் முன்னணி இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கல்வியின் சிறப்பு, உலகளாவிய கூட்டாண்மை மற்றும் தொழில்துறையுடனான ஈடுபாடு போன்றவற்றின் கலவையாக, இந்நிறுவனத்தின் கற்கைnறிகள் அடுத்த தலைமைமுறை தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், பிரச்சினைகளைத் தீர்ப்பவர்கள் மற்றும் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தலைவர்களை உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
SLIIT இன் கணினி பீடமானது 13,000ற்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்டிருப்பதுடன், மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் வளர்ச்சியுற்று நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் துடிப்பான பீடமாகவும் விளங்குகின்றது. இது தேசிய முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய சந்தைத் தேவைகளுக்கு இணங்கக்கூடிய வகையில் விரிவான இளமானி மற்றும் முதுமானி பட்டக் கற்கைநெறிகளை வழங்கிவருகின்றது.
கல்வியின் சிறப்பு மற்றும் தொழில்துறைக்கு ஏற்ற வகையிலான அதன் பாடநெறிகளின் காரணமாக SLIIT இலங்கையின் உயர்ந்த தரப்படுத்தலைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகின்றது. டைம்ஸ் உயர்கல்வி பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025ற்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களில் இது மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதுடன், கணினிப் பீடம் நாட்டின் உயர்ந்த இரு பீடங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. அத்துடன் கணினி விஞ்ஞானத்துக்கான 2025 உலகப் பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தலில்; 1001+ இடம்பிடித்துள்ளது. அத்துடன், இதன் கற்கைநெறிகள் ஆய்வு, புத்தாக்கம் மற்றும் கல்விசார் செயல்திறனின் முன்னணியாளர் என்பதை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உறுதிப்படுத்துகின்றது.
எதிர்கால வேலைவாய்ப்புக்களை மனதில் கொண்டு SLIIT இன் கற்கைநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கணினித் துறை பட்டதாரிகளில் 98% க்கும் அதிகமானோர் பட்டம் பெற்றவுடன் குயறுகிய காலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெறுவதால், இத்துறை உள்ளிரப்புப் பயிற்சி, இறுதி ஆய்வு மற்றும் ஆழ்ந்த தொழில் ஈடுபாடு மூலம் நேரடி கற்றலை வழங்குகிறது. மாணவர்கள் கோட்பாட்டு ரீதியான அறிவை மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் 1,000 க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள் மூலம் நிஜ உலகச் சவால்களைத் தீர்க்கும் திறன்களைப் பெறுகின்றனர்.
SLIIT இன் கணினிப் பீடத்தின் பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் நுவன் கொடகொட கருத்துத் தெரிவிக்கையில், “கணினித் துறையில், நாங்கள் வெறும் தொழில்நுட்பத்தை மாத்திரம் கற்பிப்பதில்லை, எதிர்காலத்தை வடிவமைகக் கூடியவர்களாக உங்களைத் தயார்ப்படுத்துகிறோம். தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல், தரவு விஞ்ஞானம், சைபர் பாதுகாப்பு, கணினி விஞ்ஞானம் மற்றும் கணினி அமைப்புகள் பொறியியல் ஆகியவற்றில் உள்ள எங்கள் கற்கைநெறிகள் பல்வேறு முதுமானி கற்கைநெறிகளுடன் சேர்ந்து, நிஜ உலக சவால்களை எதிர்கொள்ள உங்களுக்குத் தேவையான திறன்களையும் நேரடி அனுபவத்தையும் வழங்குகின்ற. உள்ளிரப்புப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் ஒரு ஈடுபாடுள்ள சமூகத்தின் மூலம், உங்கள் திறனை நீங்கள் கண்டறியவும், புத்தாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் நாம் உதவுகிறோம். எங்கள் இலக்கு எளிமையானது, நீங்கள் உலகிற்குள் நுழையும்போது, நீங்கள் ஒரு வேலைக்குத் தயாராக இருப்பது மட்டுமல்லாமல், ஒரு மாற்றத்தை உருவாக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதே அதுவாகும். இதுவே SLIIT மாணவர்களை ஏனையவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது” என்றார்.
இந்த நிறுவனத்தின் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலாதாரங்கள், நேரடி கற்றலை ஆதரிக்கும் அதிநவீன கணினி ஆயவுகூடங்கள், கண்டுபிடிப்பு மையங்கள் மற்றும் ஆராய்ச்சி வசதிகள், செயற்கை நுண்ணறிவுக்கான தனித்துவமான மையங்கள் ஆகியகை அடங்குகின்றன. அதன் முதன்மை செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையம் (COEAI) படைப்பாற்றல் பயன்பாட்டைச் சந்திக்கும் ஒரு சூழலை உருவாக்குகிறது.
ஆய்வுகளுக்கான மானியங்கள், உலகளாவிய பல்கலைக்கழக ஒத்துழைப்புகள், CODEFEST போன்ற மதிப்புமிக்க சர்வதேச போட்டிகள் மற்றும் ICAC (www.icac.lk) போன்ற உயர் தரவரிசை சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளுடன், முன்னேற்றம் காண எதிர்பார்க:கும் மாணவர்களை வழிநடத்தத் தயாராகும் ஒரு சூழலை ஏற்படுத்துகின்றது.
இன்று, SLIIT தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மென்பொருள் பொறியியல், தரவு விஞ்ஞானம், தகவல் அமைப்புகள் பொறியியல், கணினி அமைப்புகள் மற்றும் வலையமைப்புப் பொறியியல், ஊடாடும் ஊடகம் மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்புப் பகுதிகளில் நான்கு வருட விசேட பட்டக் கல்வியை வழங்குகிறது. மேலும், கணினி விஞ்ஞானம் மற்றும் கணினி அமைப்புகள் பொறியியலில் பட்டப்படிப்புகளும் இங்கு கிடைக்கின்றன.
11 பேராசிரியர்கள் மற்றும் 32 கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட கல்வி ஊழியர்கள் கொண்ட ஒரு குழுவுடன், SLIIT உள்நாட்டு ஊழியர்களின் நிபுணத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனைப் பெருமையுடன் உறுதிப்படுத்துகிறது. SLIIT உலகளாவிய இடமாற்று விருப்பங்களையும், உயர் தரவரிசை உலகளாவிய பல்கலைக்கழகங்களுக்கு இரட்டைப் பட்டப் படிப்புகளையும் வழங்குகிறது. சர்வதேச அங்கீகாரத்துடன், பட்டதாரிகள் மேம்பட்ட படிப்புகளை அல்லது வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற நன்கு தயாராக உள்ளனர்.
டிஜிட்டல் பொருளாதாரம் வேகமடையும் போது, SLIIT ஆர்வமுள்ள, தொழில்நுட்ப ஆர்வமுள்ள மாணவர்களை இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கவும், மதிப்புமிக்க தகுதிகளையும், அவர்களைத் தனித்து நிற்கும் அனுபவத்தையும் பெறவும், உலகத்தை வடிவமைக்கத் தயாராக இருக்கும் எதிர்காலத்துடன் இணையவும் அழைக்கிறது.
கற்கைநெறிகள் மற்றும் இவற்றுக்கான மாணவர்களின் இணைப்புக்குள் பற்றிய மேலதிக தகவல்களை www.sliit.lk என்ற இணையத்தளத்தில் அல்லது https://www.sliit.lk/computing/ என்ற இணைப்பில் பார்வையிடவும் அல்லது +94 11 754 4801 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.
Be First to Comment