தசைப்பிடிப்பைத் தடுப்பதற்கு Link Natural இடமிருந்து புதிய மூலிகை நிவாரணி
தசைப்பிடிப்பைத் தடுப்பதற்கு Link Natural இடமிருந்து புதிய மூலிகை நிவாரணி
By admin on July 11, 2023
லிங்க் நெச்சுரல் நிறுவனம் தசைப்பிடிப்புக்களைத் தடுப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய கடுமையான வலிகளிலிருந்து நிவாரணம் வழங்கக் கூடிய தனித்துவமான சிறப்பு மூலிகை கிறீமான ‘க்ராம்ப்;கார்ட் பிளஸ்’ என்ற தனது புதிய தயாரிப்பை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
தசைப்பிடிப்பைத் தடுப்பதற்கு தனித்துவம் மிக்க மூலிகை கிறீமை தயாரிக்க 04 வருடங்கள் விரிவான ஆராய்ச்சி
லிங்க் நெச்சுரல் இன் நிபுணத்துவத்தின் விளைவாக ஆயுர்வேத அறிவை நவீன விஞ்ஞானத்துடன் இணைத்து அதிநவீன புதுமையான தயாரிப்பு
இந்தப் புதிய தயாரிப்பானது லிங்க் நெச்சுரல் இன் தற்போதைய மூலிகை வலி நிவாரண வகையை மேலும் பலப்படுத்துகிறது, இதில் அடங்குபவை,
மசில்காட் – தசைநார், தசை பலவீனம், தசைச் சிதைவு மற்றும் தசை வலிகளுக்கு நிவாரணி
சமஹன்இ எஸ்பி பாம் தினசரி ஏற்படும் வலிகளிலிருந்து பாதுகாப்பான, விரைவான மற்றும் நீடித்த நிவாரணத்தை வழங்குவதுடன், மாதவிடாய் வலியைப் போக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
லிங்க் நெச்சுரல் என்பது அதிநவீன திறன்களைக் கொண்ட ஒரு ஆராய்ச்சி அடிப்படையில் இயங்கும்இ ஆயுர்வேதத்தின் ஞானத்தையும், தனது உற்பத்தி, தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் முறையுடன் திறம்பட இணைப்பதிலும், சர்வதேச தரத்திலான உயர்ந்த பலனுள்ள தயாரிப்புக்களுக்காகவும் தனித்துவமான திறன்களுக்காகவும் மிகப் பிரபலமானதாக விளங்கும் நிறுவனமாகும். லிங்க் நெச்சுரல் உலகப் புகழ்பெற்ற லிங்க் சமஹன் மற்றும் நுகர்வோர் நீண்ட ஆயுளுடன் வாழ உதவும் பல தயாரிப்புகளின் தாயகமாகும்.
‘க்ராம்ப்கார்ட் பிளஸ்’ இன் அறிமுகமானது, தசைப்பிடிப்புகளால் வாழ்க்கைத் தரம் மற்றும் உடல் செயல்திறன் மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதன் மூலம், இந்தத் துறையில் நிறுவனத்தின் அறிவையும் நிபுணத்துவத்தையும் மேலும் உருதிப்படுத்துகிறது.
தசைப்பிடிப்பு என்பது இன்று பலர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். இதிலிருந்து விடுதலை பெறுவதற்கு அல்லது நிவாரணம் பெறுவதற்கு, கவுண்டர்களில் கிடைக்கும் தைலம், பாம் அல்லது வலி நிவாரணிகளைத் தேய்த்தாலும் வலியினால் தொடர்ந்தும் அவதிப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்தப் பிரச்சினையை அடையாளம் கண்டு, நீண்டகாலத் தேவைக்கான தீர்வை வழங்கும் நோக்கில் தசைப்பிடிப்புக்களிலிருந்து பாதுகாப்பான நிவாரணங்களை வழங்குவதுடன், இவ்வாறான அனுபவங்கள் தொடர்ந்தும் இடம் பெறாமல் தடுப்பதற்காகவும் லிங்க் நெச்சுரல் ‘க்ராம்ப்கார்ட் பிளஸ்’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
சடுதியான மற்றும் வலிமிகுந்த தொடர்ச்சியான தசைச்சுருக்கமானது, பாதிக்கப்படும் நபரின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொது நலத்தை பாதிக்கின்றன. இளம் வயதினருக்கும், முதியவர்களுக்கும் இரவு நேரத் தூக்கம்; பெரும்பாலும் வலிமிகுந்த தசைப்பிடிப்புகளுடன் எழுந்திருப்பதால் மிகவும பாதிக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களும், பெண்களும் தொடர்ந்து விளையாட்டு தொடர்பான தசைப்பிடிப்புகளை எதிர்கொள்கின்றனர். அவை வலுவாக முடிக்கும் திறனை சவால்களுக்கு உள்ளாக்குவதுடன், ஒரு நிகழ்வை முடித்து தங்கள் இலக்கை அடைவதிலிருந்து அவர்களைத் தடுக்கவும், மற்றும் அவர்கள் விரும்பும் நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றது. வயதானவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு செயல்களைச் செய்யும்போது தசைப்பிடிப்புக்களை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
மூலிகை சுகாதாரப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேதத்தின் ஞானத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதில் மூலம் Link Natural, தசைப்பிடிப்புகளைத் தடுக்க தினசரி மற்றும் எளிதில் பயன்படுத்தக் கூடிய, வேகமாக உறிஞ்சக்கூடிய கிறீம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது தசைப்பிடிப்புகளை விரைவாக நீக்கி, தசைகளில் ஏற்படும் வலியை வெகுவாகக் குறைக்கிறது.
‘க்ராம்ப்கார்ட் பிளஸ்’ இன் உருவாக்கம் என்பது லிங்க் நெச்சுரல் மூலம் உருவாக்கப்பட்டுள்ள தனித்துவமான கலவையாகும் என்பதுடன், காலத்தின் தேவைக்கேற்ப தசைப்பிடிப்புகளைத் தடுக்கவும் விரைவாக நிவாரணம் செய்யவும் , ஒருங்கிணைந்து செயல்படுகின்ற சக்திவாய்ந்த மூலிகைப் பொருட்களை உள்ளடக்கிய தயாரிப்பாகும். சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, ஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு, சோர்வு எதிர்ப்பு, ஒட்சிசன் ஊட்டும், நரம்பியல் பாதுகாப்பு மற்றும் வலி நிவாரணி விளைவுகள் கொண்டுள்ள, ‘க்ராம்ப்கார்ட் பிளஸ்’ உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு நடவடிக்கைகளின் போது மற்றும் வீட்டில் முதலுதவிப் பெட்டிக்குள் இருக்க வேண்டிய முக்கியமான தயாரிப்பாகும். மேலும் இது தசைப்பிடிப்புக்கு ஆளாகும் நபர்களுக்கு கட்டுப்பாடற்ற நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நம்பிக்கையைத் தருகிறது.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் டாக்டர் சமந்த தென்னக்கோன் குறிப்பிடுகையில், “தசைப்பிடிப்பு என்பது கடுமையான வலிகளை ஏற்படுத்தி உடல் ரீதியான செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதுடன், தூக்கத்தையும் குழப்பும் வகையில் அமைந்து விடுகின்றன. எமது புதிய உற்பத்தியான ‘க்ராம்ப்கார்ட் பிளஸ்’ நிவாரணம் வழங்குவதற்கான தீர்வாக மாத்திரமன்றி, தசைப்பிடிப்புக்களைத் தடுப்பதாகவும் அமைகிறது. ‘க்ராம்ப்கார்ட் பிளஸ’; நாளாந்தப் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானது என்பதுடன், பாதிக்கப்படும் தரமான வாழ்க்கையை சீர்செய்ய மில்லியன் கணக்கான மக்களுக்கு நன்மை அளிக்கும்” என்றார்.
Be First to Comment