Press "Enter" to skip to content

பட்டப்படிப்புத் திட்டங்களுக்கான கடன்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவும் BCI கம்பஸ்

உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நீர்கொழும்பில் அமைந்திருக்கும் BCI கம்பஸ் என நன்கு அறியப்படும் பெனடிக்ட் XVI சர்வதேச உயர் கல்வி நிறுவனம் கேள்வி நிறைந்த பல்வேறு பட்டப்படிப்புத் திட்டங்களையும் பட்டங்களுக்கான பாதைகளையும் வழங்கி வருகிறது. இவ்வகையான இளங்கலைமானிப் பட்டங்கள் வணிகவியல், கல்வியியல், கணினிப் பீடம் மற்றும் சர்வதேச படிப்புப் பீடங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன. வணிக முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், ஆரம்ப பிள்ளை சர்வ பராமரிப்பு மற்றும் விருத்தி தொடர்பான பட்டம், தாராளவாத கலைகளில் இளங்கலைமானிப் பட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

  • அவற்றில் சில
  • வணிக முகாமைத்து இளமானிப் பட்டம்
  • தகவல் தொழில்நுட்பத்தில் இளவிஞ்ஞானமானிப் பட்டம்
  • மென்பொருள் பொறியியல்லில் இளவிஞ்ஞானமானிப் பட்டம்
  • ஆரம்ப பிள்ளை சர்வ பராமரிப்பு மற்றும் விருத்தி தொடர்பான பட்டம்
  • தாராளவாத கலையில் இளங்கலைமானிப் பட்டம் (Campion College – Australia)

சிறந்த அணுகல் மற்றும் கட்டுப்படியாகக் கூடிய கட்டணங்கள் உயர் கல்வியை எதிர்பார்க்கும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் தேவையை அங்கீகரிக்கும் வகையில், கல்வி அமைச்சினால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான வட்டியல்லா கடன் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக உதவுவதற்கு இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்காக ஆலோசகர்களுடன் கூடிய அலுவலகமொன்றை அமைத்திருப்பதுடன், ஓகஸ்ட் 07ஆம் திகதி என்ற இறுதித் திகதிக்கு முன்னர் மாணவர்கள் ஒன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு இதன் ஊடாக உதவி வழங்கப்படும்.

2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீடசையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஆங்கில மொழியிலான திறமை என்ற ஆகக் குறைந்த தகுதியைக் கொண்டிருந்தால் அவர்களின் வருடாந்தக் கட்டணத்தை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்த வட்டியில்லாக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தக் கடனுதவியானது இளங்கலை பட்டப்பாடத்திட்டத்தின் முழுமையான கொடுப்பனவையும் உள்ளடக்குகிறது. நான்கு வருடப் பட்டக்கல்விக்கான ஆகக் கூடிய கடன் தொகை 800,000 ரூபாவாகும். பெற்றோர் மற்றும் நெருக்கமான உறவினர்கள் உத்தரவாதம் வழங்குபவர்களாகச் செயற்பட முடியும் என்பதுடன், அவர்களின் பொருளாதார நிலைமைகள் கோரப்படாமையால் தகுதி பெற்ற பெரும்பாலான மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்கும் காலத்தில் எந்த வித கொடுப்பனவையும் செலுத்தாது 05 வருடங்கள் சலுகைக்காலம் வழங்கப்பட்டிருப்பதுடன், திருப்பிச் செலுத்துவதற்கு மேலும் 07 வருடங்கள் வழங்கப்படுகிறது (அதாவது வட்டியற்ற கடனை மீளச் செலுத்த மொத்தம் 12 வருடங்கள் வழங்கப்படுகிறது). அது மாத்திரமன்றி மாணவர்கள் தமது வாழ்வாதார செலவீனத்துக்கு மேலதிகமாக 300,000 ரூபாவையும் பெற்றுக்கொள்ள முடியும்.
தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் நீர்கொழும்பு, கம்பஹா அல்லது மினுவாங்கொட போன்ற அயல் பிரதேசங்களில் இருந்து வருபவர்களாயின் அன்றாடம் பயணிக்க முடியும் என்பதுடன், தூரப் பிரதேசத்தில் இருப்பவர்கள் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்களாயின் கம்பஸ் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தக் கம்பஸானது பல்வேறு விரிவுரை அறைகள், செயலமர்வுக்கான மண்டபங்கள் மற்றும் ஓய்வறைகள், தனிப்பட்ட ரீதியில் அல்லது குழுவாக இணைந்து கற்பதற்கான இடவசதி கொண்ட நூலகம், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் தொழில்நுட்ப கூடங்கள், சூழலுக்கு நட்பான உள்ளக மற்றும் வெளியாக உணவுக்கான பகுதி, ஓய்வெடுப்பதற்கான உள்ளக மற்றும் வெளியகப் பகுதி போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் https://www.bci.lk/ என்ற இணையத்தளம் அல்லது அலுவலகத்தின் 031 20 35 100 மற்றும் 031 222 44 22 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 070 6035 100 மற்றும் 076 6989 797என்ற விசேட தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தொடர்புகொண்டு பட்டப்படிப்புத் திட்டங்களுக்கும் கடன் திட்டத்துக்கும் விண்ணப்பிக்க முடியும்.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *